Kogilavani / 2017 மே 16 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
“அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை விற்று, வாகனமொன்றைக் கொள்வனவு செய்தது உண்மைதான். இதுவொன்றும் பாரதூரமான விடயமல்ல. யாரும் செய்யாத ஒன்றை நான் செய்துவிடவில்லை” என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
“இதுவரை இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத புதிய விடயம் எதனையும் நான் செய்துவிடவில்லை. கோடி ரூபாய் கொடுத்து வாகனத்தை வாங்குமளவு பணம், என்னிடமில்லை. அதனால், அரசாங்கம் வழங்கிய தீர்வையற்ற வாகன இறக்குமதிப் பத்திரத்தை விற்று, வாகனத்தை வாங்கினேன்” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தை விற்றுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறிய அவர்,
“சாதாரணமாக 100 பேர் பணியாற்றும் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் முகாமையாளர்களுக்கே, உரிய கௌவரத்துடன் வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, வாகனங்கள் வழங்கப்படுவதில்லை. வாகன வசதிகளைக் கேட்டால், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை மட்டுமே, அரசாங்கம் வழங்குகின்றது. இதனை வழங்கும் அரசு, அதற்கான வரியைச் செலுத்த தேவையில்லை என்று கூறுகின்றது.
“கோடி ரூபாய் கொடுத்து வாகனத்தை இறக்குமதி செய்யுமளவு பணம் என்னிடமில்லை. உண்மையைக் கூறினால், நான் ஏற்கனவே வைத்திருந்த காரை விற்றுவிட்டே, தேர்தலில் போட்டியிட்டேன். இவ்வாறிருக்கும்போது, கோடி ரூபாய் கொடுத்து, எவ்வாறு வாகனத்தை வாங்க முடியும்?
“நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மக்களுக்கு சேவையாற்றும்போது பஸ்களில் சென்றுகொண்டிருக்க முடியாது. அதேபோன்று, என்னால் வாகனத்தையும் இறக்குமதி செய்யமுடியாது. எனவே, நான் எனக்குக் கொடுத்த தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தை விற்று, வாகனத்தை வாங்கினேன்” என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago