2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன்'

Sudharshini   / 2016 ஜூன் 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

எனது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக செயற்றிட்டங்கள் கோரப்பட்டன. நான் பல திட்டங்களை மாகாண நிதி ஆணைக்குழுவிடம் முன்வைத்தேன். ஆனால், அவற்றில் பல ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பில் எனக்கு கடிதமாவது அனுப்பப்பட வேண்டும். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் பொறுப்புச் சொல்ல வேண்டும் என மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட உறுப்பினர்; எம்.சிவஞானம் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், அதன் தலைவர்; எல்.டி.நிமலசிறி தலைமையில் பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அபிவிருத்தி தொடர்;பான எனது முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், அதற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும். என்னை தெரிவு செய்த மக்களுக்கு நான் என்ன பதில் கூறுவது. ஏனக்கு வாக்ககளித்தவர்கள் பொதுமக்களாகும். எனவே, பொதுமக்களுக்கு நான் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளேன்'என்றார்;.

'சில காலங்களுக்கு முன் பெருந்தோட்டப் பகுதிப்பாடசாலைகளில் ஆசிரியர்; குறைப்பாடு பாரியளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் 6,000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் சந்திரிகா அம்மையார் காலத்திலும் 6,000 பேருக்கு நியமனங்கள் பெரும் தோட்டப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அவர்;களது நியமனத்துடன் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, அவர்;கள் நியமனம் பெறும் பாடசாலையில் குறைந்தது பத்து வருடங்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்பதாகும்.

ஆனால், தற்போது அவர்;களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன். அப்படி இடமாற்றங்கள் வழங்குவதாயின் ஒரு ஒழுங்கு முறையில் திட்டத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரதும் தேவைகளுக்காக இடமாற்றம் வழங்காது பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமாக மாத்தளைப் பிரதேச ஆசிரியர்கள் நுவரெலியாவிலும் நுவரெலியாப் பிரதேச ஆசிரியர்கள் குருநாகல்லிலும் கடமை புரிகின்றனர்;. எனவே, அது தொடர்பாக விசேட செயற்றிட்டம் ஒன்று தேவை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .