2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

'வெளிமாவட்ட மாணவர்களுக்கு '2017இல் அனுமதியில்லை'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டிலிருந்து, வெளிமாவட்ட மாணவர்களை நூரளை மாவட்டத்தில், பரீட்சைக்கு அனுமதிக்கப் போவதில்லை என அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்,  கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,   நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், கே.கே.பியதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல புதுமுக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.
இதன்போதே, மேற்படித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,

'வெளிமாவட்ட மாணவர்கள் நுவரெலியாவில் மாவட்டத்தில் பரீட்சை எழுதினாலும், மாவட்டத்துக்கு நிர்ணயிக்கிப்பட்ட வெட்டுப்புள்ளிகளே அவர்களுக்கு வழங்கப்படும்.  இம்மாணவர்கள், பாரியளவில் பணம் செலவழித்து சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்து பரீட்சை எழுத வருவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தாம் கல்வி கற்பதற்காக இணைந்துள்ள பாடசாலையில், கழிவறை எங்கு அமைந்திருக்கின்றது என்பதுகூட இம்மாணவர்களுக்கு தெரியாதுள்ளது' என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .