2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

‘ஹட்டன்-பொகவந்தலாவை வீதி அபிவிருத்தி செய்யப்படும்’

Kogilavani   / 2017 மே 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நோர்வூட் விஜயத்தையொட்டி, ஹட்டன் முதல் நோர்வூட் நகரம் வரையிலான பிரதான வீதி, செப்பனிடப்பட்டதை போன்று, ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை வரையான வீதியும் செப்பனிடப்படும்” என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, நேற்று(16) தெரிவித்தார்.  

இந்தியப் பிரதமரின் நோர்வூட் வருகை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், ஹட்டன் முதல் நோர்வூட் வரையான வீதி மட்டுமே செப்பனிடப்பட்டது. இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.   

மேலும் கூறிய அவர்,   

“இவ்வீதி அவசர தேவைக்காகவே அபிவிருத்தி செய்யப்பட்டது. இதற்கு பல மட்டங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. வீதி அபிவிருத்திப் பணியை நோர்வூட் நகரம்வரை மட்டுப்படுத்தாமல் ஹட்டன் தொடக்கம் பொகவந்தலாவை வரை தொடர்ந்தால் நல்லது என பொதுமக்கள் கோரியிருந்தனர்.   இதற்கமைவாக, ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை வரையிலான வீதி, அபிவிருத்தி செய்யப்படும்” என்று, அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .