2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகிய 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

பிலிமதலாவ பாடசாலையொன்றில் இன்று புதன்கிழமை நான்கு ஆசிரியர்கள் உட்பட 66 மாணவர்கள் குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இம்மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பாது குளவிக் கூட்டுக்கு கல் எரிந்தமையால் குளவிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்குளவிகள் வகுப்பறைக்குள்ளும் புகுந்து தாக்குதலை நடாத்தியுள்ளன. இதனால் மாணவர்கள் அல்லோல கல்லோப்பட்டு ஓடியுள்ளனர்.

இதில் தாக்குதலுக்குள்ளாகிய மாணவர்கள் கடுகண்னாவ மாவட்ட வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 25 மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X