Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, கட்டுகஸ்தோட்டை திகனை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு பெருமளவில் கஞ்சா விநியோகம் செய்த ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
பிபிளை அய்வளை என்னுமிடத்தை சேர்ந்த இச்சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு கஞ்சா விநியோகம் செய்ய வந்தபோதே 2 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் நடத்திய மேலதிக விசாரணையின்போது, பிபிளையிலுள்ள அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஐந்து கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர்.
இச்சந்தேக நபர் நீண்டகாலமாக இப்பிரதேசத்தக்கு கஞ்சா விநியோகம் செய்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். இவர் ஒரு கிலோ கிராம் கஞ்சாவை 30,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெளினாவல மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார விசாரணைகளை நடத்துகின்றனர்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago