Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 05 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
நகர்புறப் பாடசாலைகளில் சமாளிக்க முடியாதளவுக்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ள அதேவேளை, கிராமப்புறப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய சந்தானந்த வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐந்தாண்டு பூர்த்தி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கல்வித்துறையில் கடதாசிச் சான்றிதழ்களை சேர்ப்பதால் மட்டும் மனிதத்துவம் வளர்ந்து விடாது.
சனிக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்பு முடிந்து வெளியேறும்போது 2000 மாணவர்கள் வெளியே வருவதை சாதாரணமாக கண்டியில் காணமுடிகிறது.
அரசாங்க பாடசாலையிலுள்ள மொத்த மாணவர்களுக்கு சமமான மாணவர் தொகையைக் கொண்டு ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்துகிறார். அதற்கு தமது பிள்ளைகளை பெற்றோர் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். இது சான்றிதழ்களை மட்டும் பெற முயற்சிப்பதையே காட்டுகிறது. இங்கு ஒழுக்கக்; கல்வியை எதிர்பார்க்கமுடியாது.
அன்றைய இலங்கையில் வாழ்ந்த ஓல்கொட் போன்ற மாமனிதர்கள் மனிதனை மனிதத்துவம் கொண்டவனாக மாற்ற சமயத்துடன் கூடிய கல்வி தேவை என்பதை உணர்ந்ததன் காரணமாக பிரபல பௌத்த பாடசாலைகள் உருவாகின. அந்த அடிப்டையில் ஆனந்தா, நாலந்தா, கண்டி தர்மராஜ போன்ற ஆண்கள் கல்லூரிகளும் விசாக்கா, மஹாமாயா, தேவி போன்ற பௌத்த பெண்கள் பாடசாலைகளும்; உருவாகின. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன என்றார் அவர்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago