2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாக்காளர் இடாப்பு குறித்து மலையக மக்கள் கரிசனை செலுத்த வேண்டும்; திகாம்பரம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் மீளாய்வு இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் பெருந்தோட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

2010ஆம் வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு தற்போது குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்த இடங்களுக்குச் சென்று தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை பெருந்தோட்டப்பகுதி மக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், பெயர்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு ஆர்வம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X