2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இலங்கையை கால்நடை உற்பத்தியில் தன்னிறைவுடைய நாடாக மாற்ற ஐந்தாண்டு திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

2016ஆம் ஆண்டளவில் இலங்கையை கால்நடை உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கு ஐந்தாண்டு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

பேராதெனிய கன்னொருவையிலுள்ள விவசாயத் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

2016ஆம் ஆண்டு கால்நடை உற்பத்தித்துறையில் தன்னிறைவு காண்பதற்காக எமது அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாக செயற்படவேண்டியுள்ளது. இறைச்சி, முட்டையில் மாத்திரமன்றி பால் உற்பத்தியிலும் தன்னிறைவு காண்பதே எமது நோக்கம்.

கால்நடை உற்பத்தியை அதிகரிக்க எமது அமைச்சு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களினால் கால்நடை உற்பத்தித்துறையில் பின்னடைவு ஏற்பட்டது. கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றில் இதன் தாக்கம் கூடுதலாக இருந்தது. இதற்கு காரணம் கோழிகளுக்கு ஏற்பட்ட ரெனிகட (கோழிக்; கொள்ளை) என்ற நோயாகும். இந்த ரெனிகட என்ற கோழி நோய்க்கான தடுப்பூசி மருந்து வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன.

தற்போது இம்மருந்தை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்துள்ளோம்.

மாடுகளுக்கு ஏற்படுகின்ற   றிண்டபஸ்ட்  (மாட்டுக் கொள்ளை) என்ற நோய் பூரணமாக அகற்றப்பட்ட நாடாக இலங்கையை பிரகடப்படுத்துவதும் இங்கு இடம்பெற்றது. மாடுகளுக்கு ஏற்படும் றிண்டபஸ்ட் என்ற நோயை 1994ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டபோதும் 2010ஆம் ஆண்டு அதனை பூரணமாக அகற்றியதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிக்கப்பட்டுள்ளதுடன் அதன் அறிக்கை அமைச்சருக்கு கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X