2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பசும் பால் வழங்கும் திட்டத்தை பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஸ்தரிக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

முன்பள்ளி பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள பசும் பால் வழங்கும் திட்டத்தை பெருந்தோட்டப்பகுதிகளில்  முறையாக அமுல்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
பிள்ளைகள் மத்தியில் போஷாக்கை அதிகரிப்பதற்காக அனைத்து பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கும் பசும் பால் வழங்கும் திட்டத்தை அரசு ஏற்பாடு செய்துள்ளது.


இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு கிளாஸ் பால் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தால் முன்பள்ளி சிறுவர்களின் போஷாக்கு மாத்திரமன்றி பால் உற்பத்தியாளர்களும் பயனடைவர்.  ஆயினும் பொதுவாகவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட சிறுவர்கள்  இத்திட்டத்தால் பயன் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
பெருந்தோட்ட பகுதிகளில் பிரிடோ நிறுவனம் நடத்தும் முன்பள்ளிகள் அனைத்தும் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த முன்பள்ளிகளுக்கு வரும் சிறுவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைவர்.
பெரும்பான்மையான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகள் இல்லாமை காரணமாக அத்தோட்டங்களில் வாழும் பாலகர்கள் இத்திட்டத்தால் பயனடைவதிலிருந்து விலக்கிவைக்கப்படுவர் என்பது கவலைக்குரிய விடயமாகும். பொருத்தமான பொறிமுறைகள் இல்லாததால் அரசு முன்வைக்கும் பல அபிவிருத்தி திட்டங்கள்  அதிலும் விசேடமாக சிறுவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் பெருந்தோட்ட பிள்ளைகளை வந்தடைவதில்லை என்ற விடயத்தை பிரிடோ நிறுவனம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது.  

அனேகமான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகள் இல்லாததால் பால் வழங்கும் போஷாக்குத் திட்டம் சிறுவர்களை வந்தடையாமல் போவதுடன்,  தோட்டங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X