2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தேயிலை கழிவுத்தூள் கடத்திய மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

சட்டவிரோதமாக 4000 கிலோகிராம் தேயிலை கழிவுத்தூளை லொறியில் கடத்திய மூவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

 


இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,


கடந்த 5ஆம் திகதி இரவு மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசித்த தொட்டகொடவத்தவுக்கு கிடைத்த தகவலையடுத்து, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டப் பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழு பிரவுன்ஸ்வீக் தோட்டப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை சோதனையிட்டது.  இதன்போது லொறியினுள் 4000 கிலோகிராம் தேயிலை கழிவுத்தூள் இருப்பதை கண்ட பொலிஸார் லொறியுடன் அவற்றைக் கைப்பற்றியதுடன், லொறியின் சாரதி, உதவியாளர் மற்றும் உரிமையாளரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.


மேற்படி தேயிலைக் கழிவுத்தூள் மஸ்கெலியாவிலிருந்து கம்பளைக்கு கொண்டு செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.


இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X