2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பதுளையில் கடும் மழை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 07 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளையில் தொடரும் கடும்மழை காரணமாக வீதிகள், வீடுகள், புகையிரத தண்டவாளங்கள் என்பன பலத்த சேதத்திற்கு உட்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை வரை பதுளை உட்பட பல பிரதேசங்களுக்கு கடும் மழை பெய்த வண்ணமிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று இரவு ஹாலிஎல, லுணுகொல்ல தோட்டத்தில் மதில்லொன்று சரிந்து வீடொன்றில் விழுந்ததில் குறித்த வீடும் அருகாமையில் இருந்த இரு வீடுகளும் பலத்த சேதத்திற்கு உட்பட்டுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பதுளை, கொழும்பு ரயில் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன. ஹாலிஎலை, உடுநுவரவுக்கு இடையிலான புகையிரத பாதையில் கலுபாலம என்ற இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத தண்டவாளங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக இன்று பதுளை நோக்கி புறப்படவிருந்த காலை புகையிரதங்கள் எதுவும் புறப்படவில்லை.

இதேவேளை, பதுளை, அலுகொல்ல, பிடவெலகம பகுதியில் பதுளையில் இருந்து கந்தேகெதர நோக்கி செல்லும் பிரதான வீதி தாழ் இறங்கி இருப்பதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேபோன்று பதுளை, பசறை, மடுல்சீமை மூன்றாம் கட்டை பிரதேசத்தில் பாரிய மண்மேடு விழுந்துள்ளதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பதுளை, ஸ்பிரிங்வெலி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது என பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலம் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X