2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆங்கில ஆசிரியர் வெட்டிக் கொலை

Kogilavani   / 2011 ஜனவரி 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராவின்,நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி,  பெல்மதுளை பிரதான வீதி,  உடகந்த என்னும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆணின் சடலமொன்று இரத்தினபுரி பொலிஸாரினால், மீட்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி வந்த சன்னஸ்கமவினை சேர்ந்த ஏ.பி.பி. பிட்டகொடை வயது 47 என்பவரே இவ்வாறு கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாதிகள் வழங்கிய தகவலொன்றின்படி மீட்கப்பட்ட இச்சடலத்தில் பல்வேறு வெட்டுக்காயங்கள் காணப்படுவதுடன்,  தலை,  கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுதவாக பிரதேச மக்ககள் தெரிவிக்கின்றனர். இக்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இக்கொலைக் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X