2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விஹாரையில் கொள்ளையிட முற்பட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, மாபனாவதுர பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன விஹாரை ஒன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்; நேற்று  சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பழைமை வாய்ந்த இந்த விஹாரையை 3 முறைகள்  உடைத்து ஒரு  மடிக்கணினி உட்;பட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

நேற்று சனிக்கிழமை இரவு சந்தேக நபர் பொருட்களை கொள்ளையிட முற்பட்டபோது, பிரதேசவாசிகள் இவரை மடக்கிப்பிடித்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்; பிரதேசவாசிகளை தாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரதேசவாசிகளும் சந்தேக நபர் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X