2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாத்தளை தொழில் அதிகாரிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாருக் தாஜுதீன்

மாத்தளை உக்குவெலயிலுள்ள ஒரு கராஜ் உரிமையாளரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபா இலஞ்சத்தை கேட்டு 150,000 ரூபாவை வாங்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட மாத்தளை தொழில் அதிகாரி ஒருவரை கொழும்பு பிரதான நீதவான் அக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைத்தார்.

கராஜில் வேலை செய்யும் 4 ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்தாமல் விட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக  இவர் கராஜ் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது.

முதலில் 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கோறிய இந்த அதிகாரி பின்னர் இலஞ்ச தொகையை 150,000 ரூபாவாக குறைத்தார் என கராஜ் உரிமையாளர் கூறியுள்ளார்.

இலஞ்சத்தை தருவதாக கூறிய கராஜ் உரிமையாளர் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறையிட்டார். இதை தொடர்ந்து ஆணைக்குழு இவரை தமது பொறியில் விழுத்த திட்டமிட்டது. குறித்த உரிமையாளர் இலஞ்சத்தை வாங்கிய வேளையில் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .