2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முட்செடியினுளிருந்து சிசு மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிபாத்

முட்செடிகளினுளிருந்து சிசு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. பன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தகெட்டிய பிரதேசத்திலுள்ள முட்செடிகளினுளிருந்தே இந்தச் சிசு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிசுவின் அழுகுரல் கேட்ட பிரதேசவாசிகள் அங்கு சென்று இந்தச் சிசுவைக் கண்டெடுத்து மடுல்கெல வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் பின்னர் இந்தச் சிசு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சிசு தேறிவருவதாகவும் இந்தச் சிசு நேற்று புதன்கிழமை இரவு பிறந்த சிசுவாக இருக்கலாம் எனவும் இந்தச் சிசுவிற்கு சிகிச்சையளித்த வைத்தியர் கூறினார்.

மேலும் இந்தச் சிசு ஏன் முட்செடிக்களுக்குள் போடப்பட்டது என்பதுடன், இந்தச் சிசுவின் தாயை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை பன்வில பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .