2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாணவி கர்ப்பம்: ஆசிரியருக்கும் மாணவியின் தாயாருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

பாடசாலை மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாகவிருந்தார் என்ற சந்தேகத்தில் கந்தப்பளை பகுதி தோட்ட பாடசாலை ஒன்றைச்சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரையும் அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் மாணவியின் தாயாரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.

கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் கர்ப்பிணியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சந்தேகத்திற்கிடமாக  குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தராமல் இருந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்தே குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்று உடனடியாக குறித்த ஆசிரியரை பாடசாலையைவிட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

நிலைமையை அறிந்து கொண்ட சந்தேக நபரான ஆசிரியர் கடமையிலிருந்து அரை நாள் விடுமுறையுடன் செல்வதற்கு முயற்சித்துள்ளார்.அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மாணவி கர்ப்பமாகுவதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும்  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டதை போதே அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0

  • Muralikrishnan Thursday, 26 September 2013 03:16 PM

    இருவரையும் தூக்கில் போட வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .