2025 ஜூலை 21, திங்கட்கிழமை

3 நாள்களின் பின்னர் பொலிஸில் முறைப்பாடு

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். செல்வராஜா                                    

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவால் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து, பசறை பிரதேசசபை உறுப்பினரான கண்மணி சிவனேசன் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த மாதம் 3ஆம் திகதி குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள சிவனேசன், நேற்று (6)  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், சாமர சம்பத் தசநாயக்கவிடம் வினவியபோது, தனக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடானது, அபாண்டமானதாகும். தன்மீது களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே, காலம் கடந்த நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் எவரையும் எச்சமயத்திலும் தாக்கவில்லை என்றுகூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .