Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம், துசித குமார
மத்துகமை-அகலவத்தை பகுதிகளில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து, கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, அகலவத்தை குடலிகமைப் பகுதியைச் சேர்ந்த, முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை, பொலிஸார் நேற்று, (22) கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, சுமார் 200 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பல வாரங்களாக மேற்கொண்டுவந்த விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .