Editorial / 2017 மே 27 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்
'வடக்கு கிழக்கு சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்து போராடிய பல வீரர்களை உருவாக்கியது வல்வெட்டித்துறை மண் என்பதை நாங்கள் மறக்க முடியாது' என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த வல்வை ஆழிக்குமரன் நினைவாக, வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு, நேற்று (26) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம், வடக்கு-கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதையே வடக்கு, கிழக்கு மாகாண சபை உட்பட அனைவரது விரும்பமாகும்.
'வடக்கு-கிழக்கு சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்து போராடிய பல வீரர்களை உருவாக்கிய மண் வல்வெட்டித்துறை மண் என்பதை, நாங்கள் மறக்க முடியாது. இன்று, வடக்கு முதலமைச்சர், வடக்குமாகாண சபை, கிழக்கு மாகாண சபை என நாங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது, அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் தான். அதையே, சிறுபான்மை மக்களும் நம்பி இருக்கின்றனர்' என்று அவர் கூறினார்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025