Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மாவா போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு வந்த நபரொருவர், அன்றைய தினமே, மீளவும் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில், நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், தனது உடமையில் மாவா போதைப்பொருளை வைத்திருந்தக் குற்றச்சாட்டில், சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (13) ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்திய குறித்த நபர், மீண்டும் மாவா போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிடப்பட்ட போது, விற்பனைக்குத் தயாராகப் பொதியிடப்பட்ட நிலையில், சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
24 minute ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
6 hours ago
7 hours ago