எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மானிப்பாய் கட்டப்பாலி ஒழுங்கையில் உள்ள குறித்த வீட்டின் மீது நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தமது முகத்தை துணியால் மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்து சேதமாக்கி தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
4 minute ago
8 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
23 minute ago
35 minute ago