2025 மே 03, சனிக்கிழமை

இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடு

Niroshini   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்
 

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசகர் அரண்மனையில், இன்று (28), இந்திய துணைத்தூதுவர் தலைமையில் , விசேட பூஜை வழிபாடு ஒன்று நடைபெற்றது.

இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை - இந்திய மக்கள் இந்த கொடிய நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்றும் இருநாட்டு மக்களும் நல்ல நட்புறவுடன் எதுவித பிரச்சினைகளும் இன்றி இறை ஆசியுடன் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதற்காக இந்திய துணை தூதரக தூதுவர் மற்றும் அதிகாரிகள், சைக்கிளில் பயணம் மேற்கொண்டு, இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சம் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X