Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் நால்வர், இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறையின் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் புதுக்கோட்டை - ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், அவர் தெரிவித்தார்.
குறித்த நான்கு மீனவர்களும், நாட்டு படகொன்றில் வந்து, தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை, ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago