Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 16 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், மே 18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராயாவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியாவில் சிங்கள தேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை நாம் நினைவுகூருகின்றோம்.
“முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.
“இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்துகொள்கின்றோம்.
“அத்துடன், இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பை எந்தத் தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்.
“இதேவேளை, புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“மக்கள் துக்கத்தை அனுபவித்துவரும்இந்தச் சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது.இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்” என்றார்.
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago