Janu / 2025 மே 08 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் புதன்கிழமை இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார். இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் நிலைகுலைந்த குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர் மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்


7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026