Editorial / 2019 மே 04 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான 296 கிலோகிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள், இன்று எரித்து அழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் தொடர்பாக, 2018 மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில், சான்றுப்பொருள்களான கஞ்சா போதைப்பொருளை எரியூட்டி அழிக்குமாறு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, நீதிமன்றப் பதிவாளரின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில், 296 கிலோகிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் எரித்து அழிக்கப்பட்டது.
33 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago