2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கழிவகற்றல் வாகனங்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வாகனங்களில் கழிவுகளைக் கொண்டுச் செல்லும்போது, வலைகளால் மூடப்பட்டே கொண்டு செல்ல வேண்டுமென, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த அறிவுறுத்தலை மீறும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளில், கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள், கழிவுகளை ஏற்றிச் செல்லும் போது, வலைகள் போடாமல் கொண்டு செல்லப்படுவதால், கழிவுகள் வீதிகளில் கொட்டப்படுகின்றன.

இது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வந்த நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் மேற்கண்டவாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X