2025 மே 19, திங்கட்கிழமை

குப்பைகளைக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளை கொட்டுவோரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர்  த.தியாகமூர்த்தி தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், இப்பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் தேங்கும் கழிவுப் பொருட்களை இரவு வேளைகளில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரியளவில் இடையூறுகளை எதிர்நோக்குகின்றனரெனத் தெரிவித்தார்.

“எனவே, குப்பை கொட்டுவோர் நல்லூர் பிரதேச சபையினால் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளில் போடுமாறு கேட்கப்படுகின்றனர்

“இதனை விடுத்து பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோர் இனங்காணப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அத்துடன், பொது இடங்களில் வாகனங்களில் குப்பைகளை கொட்டுவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒழுக்க விதிகளை மதித்து குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X