Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, நாளை (06) கொடியேற்றம் இடம்பெற்றவுள்ளது. அதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு, இன்று (05) எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள வேல்மடம் முருகன் தேவாலயத்தில், இன்று (05) காலை 9 மணிக்கு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதியூடாக, காலை 9.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
அங்கு சுபநேரத்தில், நல்லூர்க் கோவிலில் கொடிச்சீலை பிரதமக் குருக்களிடம் கையளிக்கப்பட்டது. நாளை (06) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து 25 நாள்கள் நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று தேர்த்திருவிழாவும் 30ஆம் திகதியன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago