2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கோப்பாய் பகுதியில் 50 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய மற்றும் உரிய அனுமதி இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X