2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சந்நிதியில் உணவளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

 செல்வச்சந்நிதி கோவில் சூழலில் வாழும் வயோதிபர்களுக்கு உணவளிக்க விரும்புவோரை தம்மை தொடர்பு கொள்ளுமாறு, செல்வச்சந்நிதி கலாமன்ற நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

செல்வச்சந்நிதி கோவில் சூழலில் வசிக்கும் வயோதிபர்கள், அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்த சந்நிதியான் ஆச்சிரமம், சுகாதார நடைமுறைகளை பின்ப்பற்ற தவறிய காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவில் சூழலில் வசிக்கும் வயோதிபர்கள், அடியவர்களுக்கு செல்வச்சந்நிதி கலாமன்றத்தினர், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, உணவுகளை பொதியிட்டு வழங்கி வருகின்றனர். 

இந்நிலையிலேயே, அடியவர்கள் முதியவர்களுக்கு உணவளிக்க விரும்புவோரை கலாமன்ற தலைவர் (0778340605), செயலாளர் (0778590980) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X