2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தமிழமுதத்துக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன் ஊடாக மாணவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைக்க பெற்று உள்ளதாவும் அதனால் நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பிலும், எவ்வளவு நிதியுதவி கிடைத்தது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .