எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 12 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும், தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் தரப்பு அடியோடு மறுத்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டார் எனவும், அதன் போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்தனர்.
அது தொடர்பில் பொலிஸ் தரப்பை கேட்ட போது, இளவாலை பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் ஒருவரை கைது செய்தததாக தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago