Niroshini / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டக் குற்றச்சாட்டின் கீழேயே, இவர்கள் உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற யாழ். மாநகர சபை மேயர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது, தமது கட்சியின் கொள்கைகளை, தீர்மானத்தை மீறி, அரசியல் இயக்கத்துக்குத் துரோகம் இழைத்து, மன்னிக்க முடியாத குற்றங்களைப் புரிந்ததாக, கட்சியின் மத்திய குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் எதுவுமின்றி, மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
8 minute ago
20 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
20 Mar 2026
20 Mar 2026