Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில், பொலிஸ் நடமாடும் சிசிடிவி கண்காணிப்புப் பிரிவு, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பிரிவு, கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்களுடன் நல்லூர் ஆலயத்துக்கு வருகை தந்துள்ளது.
இதனை, யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
அத்துடன், குறித்த பிரிவின் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
25 திருவிழாக்களில் இன்று 16ஆம் நாள் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 18ஆம் திருவிழாவான கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றவுள்ளதுடன், அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் ஒன்றுகூடுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago