2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பசுக்கொலைக்கு எதிராக போராட்டம்

Mayu   / 2024 மே 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன், எம்.றொசாந்த் 

இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இலங்கை சிவசேனை தலைவர் மூதறிஞர் மறவன் புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவருமாகிய திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பசுக்கொலைக்கு எதிராக தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X