Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பின் நிதி அனுசரனையில் சனிக்கிழமை (24) மல்லாகம் கல்லாரை கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவைப் புகட்டுவதன் ஊடாகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை கிராமங்கள் தோறும் முன்னெடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாகவே, கல்லாரை வளர்மதி சனசமூக நிலைய முன்றலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .