Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 18 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பருத்தித்துறையில் உள்ள திரையரங்கு ஒன்று, சுகாதாரத் துறையினரால், சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாமை, கொரோனா வைரஸ் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழேயே, குறித்த திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறைப் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் இருவர் அண்மையில் இனங்காணப்பட்டதை அடுத்து, அவர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய 25க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதன் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், பருத்தித்துறையில் உள்ள திரையரங்கைத் திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த அறிவுறுத்தலை மீறி, அந்தத் திரையரங்கு திறக்கட்டதுடன், அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளிக்கப்பட்டுள்ளது.
அதனாலேயே, அந்தத் திரையரங்கு சீல் வைக்கட்டு மூடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .