2025 மே 01, வியாழக்கிழமை

பலாலியில் பிரித் ஓதல்

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - பலாலி விமானப் படைத் தலைமையகத்தில் பிரித்து ஓதும் ஆராதனை, இன்று (03) நடைபெற்றது.

இலங்கை விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் சுதர்சன பதிரண ஆலோசனைக்கு அமைய, விமானப்படையின் பிரித்து ஓதும் ஆராதனை நிகழ்வு நாடு பூராகவும் உள்ள விமானப்படை தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய வருட பிறப்பை முன்னிட்டும், நாட்டிலுள்ள மக்களுக்கு சாந்தி சமாதானம் நிகழ வேண்டியும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டியும், குறித்த பிரித்து ஓதும் ஆராதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே, பலாலியில், இந்நிகழ்வு இன்று நடைபெற்றது.

பலாலி விமானப்படைத் தளத்தின் குறூப் கெப்டன் (குழு தளபதி) ரசங்க சொய்சா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புனித தீபம் ஏற்றப்பட்டு, பபிரித் ஓதப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .