Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சிறந்த உறவுப்பாலமாக அமையுமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தில் அதிகூடிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக நான் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது காங்கேசன்துறைமுகம் மற்றும் மயிலிட்டி துறைமுகங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தேன்.
அதே போல பல்வேறு துறைகளிலும் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் இங்கு மேற்கொண்டு வருகின்றது. இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் விடுத்த கோரிக்கைகளுக்கமைய அரசாங்கம் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையிலயே இந்த விமான நிலையத்தையும் சிவில் விமானநிலையமாக அதாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றுகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இப்பிரதேசதங்களில் இத்தகைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. கடந்த முப்பது வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற இப்பிரதேசங்களில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அதற்கமைய அரசாங்கம் தொடர்ந்தும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி செய்து வருகின்றது.
இத்தகைய செயற்பாடுகளுக்கு, வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களும் மக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியிரக்கின்றனர். அதே போல தொடர்ந்தும் அரசாங்கத்துகு ஆதரவை வழங்க வேண்டும். அதனூடாக மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும். குறிப்பாக இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதனூடாக இங்குள்ள மக்களுக்கு பல்வேறு வசதி வாய்ப்புகள் ஏற்படக் கூடியதாக இருக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
4 hours ago