Editorial / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
பாடசாலை சமூகத்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்குப் பழிதீர்க்கும் நோக்கத்தில், பாடசாலை வளாகக் கட்டடங்களுக்குள் மலம் கழித்த, அதே பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையையும் மகனையும், பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, வேலணை - செட்டிபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு, கடந்த விடுமுறை நாள்களில் சென்றுள்ள மேற்படி தந்தையும் மகனும், அப்பாடசாலை அலுவலகம், பிரதான மண்டபம், மற்றும் நூலகம் என்பவற்றில், மலம் கழித்துள்ளார்களென, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், பாடசாலை அதிபரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 50 வயதுடைய தந்தையும் 30 வயதுடைய மகனுமே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவ இடங்களிலிருந்து, மலம் கழித்துவிட்டுத் துடைக்கப்பட்டதாகக் கருதப்படும் பஞ்சுத் துண்டுகளை, ஆங்காங்கே சில இடங்களிலிருந்து மீட்டுள்ளதுடன், அந்தப் பஞ்சுத் துண்டுகளில் ஒட்டியிருந்த மயிர்த் துண்டுகள் சிலவற்றை, மேற்படி சந்தேக நபர்களுடையனவா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, அரச மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான ஒப்பந்தம், குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்காமல், வெளி நபரொருவருக்கு வழங்கப்பட்டதான தனிப்பட்ட கோபத்திலேயே, மேற்படி அசிங்கச் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago