2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘பிரதேச சபை சர்வாதிகாரமாக இயங்குகின்றது’

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். தொண்டைமானாறு அக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் 35 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கரை சுற்றுலா பகுதிக்கு அடுத்தாண்டு குத்தகைக்கான கேள்விப்பத்திரம் வெளியிட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“எங்கள் கிராமத்தின் அபிவிருத்திகளை தீர்மானிக்க வேண்டியது, எமது சமூக மட்ட அமைப்புகளின் பொறுப்பு.  மக்களுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கமுடியும்.

இச்சுற்றுலாத் தளத்தை அகற்றுமாறு கோரி நாம் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நிலையில், வலிகிழக்கு பிரதேச சபை சர்வாதிகார போக்குடன் செயற்படுவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என அக்கரை மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .