Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 10 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் 18ஆம் திகதி சிறப்புற இடம்பெறுமென வட, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ அடிகளார் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு வருடங்களிலும் இடம்பெறுகின்ற நினைவேந்தலை போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு வட,கிழக்கு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அதற்கான ஆயத்த பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
“நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறும்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்துக்கு அருகில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளன. பொலிஸாரும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago