2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘பொம்மைவெளி பகுதிகளின் வடிகாலமைப்பு சீரமைக்கப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி, புதிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காணப்படும் வீதி வடிகால்கள் புனரமைக்கப்படுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். 

அத்துடன், அப்பகுதிகளில் காணப்படும் போதைப்பொருள் பாவனை, மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பாக, தீர்வு காணப்படுமெனவும், அவர் கூறினார்.

குறித்த பகுதிகளுக்கு, இன்று (24) விஜயம் மேற்கொண்ட அங்கஜன் இராமநாதன் எம்.பி, அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டப் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X