2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மன்னார் - யாழ்ப்பாணம் வீதியுடனான போக்குவரத்து சீரடைந்தது

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக மண்டைக்கல்லாறு,  வீதியை ஊடறுத்து பாய்ந்த காரணத்தால் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்குமான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த நிலையில்,  இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முதல் போக்குவரத்துச் சீரடைந்துள்ளது.

வீதியை மறைத்து பாய்;ந்த வெள்ளத்தால் இவ்வீதியுடனான போக்குவரத்து கடந்த 6 நாட்களாக தடைப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் பஸ்கள், மண்டைக்கல்லாறு வெள்ளம் பாயும் பகுதியில் மக்களை இறக்கிவிட, அங்கிருந்து படகு மூலம் கடற்படையினர் பயணிகளை ஏற்றி மறுகரையில் விட்டு வந்தனர்.

தற்போது, வெள்ளம் வடிந்துள்ளமையால் இன்று முதல் நேரடியாக பஸ் சேவை இடம்பெறுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .