Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சியொன்றையோ அல்லது புதிய கூட்டு முன்னணியொன்றையோ அமைப்பாராக இருந்தால், அதில் தாங்கள் அங்கம் வகிக்கத் தயாராக இருப்பதாக, ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள அவருடைய வீட்டில், நேற்று (04) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இப்பொழுது அண்மைக் காலமாக தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் அங்கம் வகிப்பதாகவும் அதே போன்று கஜேந்திரகுமாரும் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரும் ஒரு புதிய தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு முனைந்து நிற்கின்றார் என்று தாங்கள் அறிவதாகத் தெரிவித்த அவர், அந்த வகையில், அவர் புதியக் கட்சியொன்றையோ அல்லது புதியக் கூட்டு முன்னணியொன்றையோ அமைப்பாராக இருந்தால், அதில் அங்கம் வகிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், தாங்கள் அங்கம் வகிப்பதால் வேறு யாரும் ஒதுங்குவார்களோ இல்லையோ என்பது தனக்குத் தெரியாதெனக் குறிப்பிட்டதுடன், அது அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முடிவெனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அவ்வாறானதொரு கூட்டு வருகின்ற நிலையில், அதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதில் இணைந்து கொள்வதற்கும், தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025