Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜூன் 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கமலேந்திரனை கொலை செய்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரெக்சியனின் மனைவி ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கமல் என்று அழைக்கப்படும் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ரெக்சியன் ஆகிய இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் டானியல் ரெக்சியன் கமலேந்திரன் என்பவரை கொலை செய்ததன் ஊடாக தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக இருவருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அறியமுடிகிறது.
பின்னணி
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கமல் என்று அழைக்கப்படும் கந்தசாமி கமலேந்திரன், ஒரு வாரத்தின் பின் கொழும்பில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
டானியல் ரெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கமலேந்திரன் மற்றும் ரெக்சியனுடைய மனைவி ஆகிய இருவரும் கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago