Editorial / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால், நாவலர் வீதியில் வைத்து கடத்தப்பட்ட நபர், அந்த குழுவினரால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்களினால் தாக்கப்பட்ட நிலையிலேயே அவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவினரால் தாக்குதல்களுக்கு உள்ளாகி படுகொலைசெய்யப்பட்ட நபரின் மனைவி மற்றுமம் மகன் ஆகிய இருவரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மாட்டை தேடிக்கொள்வதில் ஏற்பட்டிருந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே, அந்த நபரை வீட்டிலிருந்து கடத்திச்சென்று, கடுமையாக தாக்குதல் நடத்தி, கோவிலொன்றுக்கு அருகில் விட்டுச்சென்றுவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026