Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 ஜூலை 17 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரை காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.
அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றடன் அடையாளம் 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்.
நேற்று (16) பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கோவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
அவர்கள் 6 பேரும் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களிடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
அவ்வாறு சுயதனிமைப்படுத்துவதற்றாக 70 பேரின் விவரங்களுடன் சுகாதாரத் துறையினர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
59 minute ago
1 hours ago